Categories
உலக செய்திகள்

இவங்கள விசாரணைக்கு கூப்பிடுங்க…. வரி குவிப்பில் ஈடுபட்ட சீனா…. ஆஸ்திரேலியாவின் அதிரடி நடவடிக்கை….!!

“ஆஸ்திரேலிய ஒயின்” மீது சீனா 218 சதவீத வரியை விதித்ததால் ஆஸ்திரேலியா முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அந்நாட்டை விசாரணைக் கூண்டில் நிற்க வைக்குமாறு ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக சீன நாடு ஆஸ்திரேலிய இறக்குமதி செய்யும் ஒயின் மீது 218 சதவீத வரியை விதித்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா வர்த்தக ரீதியாக முறைகேடு செய்ததால் தான் இவ்வாறு வரியை விதித்ததாகவும் சீனா கூறியுள்ளது. இதனையடுத்து சீன அரசின் இந்த செயலால் ஆஸ்திரேலிய நாட்டின் ஒயின் தொழிற்சாலைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஒயினின் மீது விதித்த வரியை ரத்து செய்வதற்கு பல முறை சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் சீனா, ஆஸ்திரேலிய நாடு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. இந்நிலையில் தற்போது சீனா ஒயின் மீது விதித்த வரி குவிப்பு குறித்து ஆஸ்திரேலியா உலக வர்த்தக அமைப்பில் புகார் கொடுத்துள்ளது.

Categories

Tech |