முன் விரோதம் காரணமாக வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் ஆட்டோவை சேதப்படுத்திய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள புலவனூர் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லத்துரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செல்லத்துரை தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து செல்லத்துரை காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டின் காம்பவுண்ட் சுவர், கண்ணாடிகள் மற்றும் ஆட்டோவை மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் காம்பவுண்ட் சுவர், கண்ணாடி மற்றும் ஆட்டோவை சேதப்படுத்திய குற்றத்திற்காக பால்ராஜ் உள்பட எட்டு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.