Categories
தேசிய செய்திகள்

பாஜக அலுவலகத்தில் சூறையாடிய பாஜகவினர்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கூறி பாஜகவினர் அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் , காமராஜ் நகர் எம்எல்ஏ ஜான்குமார் இந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் போட்டியிட்ட தொகுதியிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை மறுப்பு தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜான்குமார் ஆதரவாளர்கள் புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆவேசமடைந்த அவர்கள் பாஜக அலுவலகத்தில் உள்ள பேனர்களையும், போஸ்டரையும் அடித்து உதைத்து உள்ளே நுழைந்து அலுவலகத்தை சூறையாடினர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் மீது அரசு உத்தரவை மீறுதல் மற்றும் நோய்த்தொற்று பரப்பும் நோக்கில் ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |