உலக நாடுகள் முழுவதிலும், ஜூலை 20 ஆம் தேதி அன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
போர் மற்றும் வறுமை காரணமாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டில் தஞ்சம் அடைபவர்கள் அகதிகள் என்று அழைக்கப்படுவர். கடந்த 2000 ஆம் வருடத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சிறப்பு தீர்மானமாக அகதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக அகதிகள் தினம் கொண்டுவரப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2001 ஆம் வருடத்தில் ஜூன் 20ஆம் தேதியன்று முதல்முறையாக உலக அகதிகள் தினமானது, 1951 அகதிகள் மாநாட்டில் 50 ஆவது வருடத்தில் அனுசரிக்கப்பட்டது. UNHCR கருத்து படி, ஜூன் 20 ஆம் தேதியானது ஆப்பிரிக்காவின் அகதிகள் தினம் என்று பதிவாகியிருந்தது.
எனினும் அது 2000 ஆம் வருடத்தில் டிசம்பர் மாதத்தில் தான் உலக அகதிகள் தினமாக பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் உலக நாடுகளில் போர்கள் மற்றும் அரசியல் போன்றவற்றால் அகதிகளாக பிற நாடுகளில் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்து வருபவர்களை நினைவுகூறும் விதமாக போராட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி போன்றவை நடத்தப்படும்.
உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 80 மில்லியன் பேர் அகதிகளாக வாழ்கிறார்கள். அச்சுறுத்தல், தீவிரவாதம் மற்றும் போர் போன்றவற்றினால் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 20 நபர்கள், தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிற நாட்டில் தஞ்சமடையும் நிலை ஏற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது.