Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் கொட்டப்படும் பூக்கள்… வறுமையில் வாடும் விவசாயிகள்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதால் நிவாரண தொகை வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலியம்பட்டி, கல்லாநத்தம், மல்லியகரை போன்ற பகுதிகளில் சம்பங்கி பூக்களை விவசாயிகள் விளைநிலங்களில் உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த பூக்களை ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மற்றும் வெளியூர்களுக்கு சென்று சாகுபடி செய்ய முடியாத அவல நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆகவே விவசாயிகள் பூக்களைை பறிக்காமல் செடியிலேயே வாட வைத்தும், நதியிலும் சாக்கடையிலும் கொட்டி செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |