பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஹாரியின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சி இளவரசர் ஆக மாட்டார் என்று உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
வேல்ஸில் இளவரசராக இருக்கும் சார்லஸ், அரசரான பின்பு முடியாட்சியை குறைப்பதற்கான திட்டங்களை தொடங்கியிருக்கிறார். அதாவது இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சிக்கு பிற அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று முன்னணியில் இடம் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அரச குடும்பத்தின் அனைத்து ஆண் வாரிசிற்கும் இளவரசராகும் உரிமை இருக்கிறது. எனினும் இளவரசர் சார்லஸ், ராயல் குடும்பத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்திருக்கிறார். ஏனென்றால் மக்கள் அதிகரிக்கும் முடியாட்சிக்கு பணம் செலுத்த விரும்ப மாட்டார்கள் என்று அவர் கருதுகிறார்.
அதன்படி சார்லஸ் அரசரான பின்பும் ஆர்ச்சி எப்போதும் இளவரசர் ஆக போவதில்லை என்று ஹாரி-மேகனுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரச குடும்பத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகையில், ஆர்ச்சி மற்றும் வேறு உறுப்பினர்களையும் நீக்குவதற்கான செயல்பாடுகளை இளவரசர் சார்லஸ் தீவிரமாக செய்வதை பார்த்து அதிர்ந்து போனதாக கூறியிருக்கிறார்கள்.