Categories
மாநில செய்திகள்

3வது அலை வந்தாலும்…. நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழகத்திலேயே தடுப்புசி உற்பத்திக்கு மாத்தி கொடுக்க  மத்திய அரசை வலியுறுத்தினார். பாதிப்பு அதிகமுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் கொரோனா வார்டுக்கு  கவச உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தார். இந்நிலையில் இன்று எழும்பூரில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |