Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான்… தனுஷின் வைரல் டுவீட்…!!!

நடிகர் தனுஷ் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .

இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது 2 மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘தந்தையர் தின வாழ்த்துக்கள். ஒரு குழந்தையின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ நண்பர்களே. நீங்கள் எனது உலகத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |