தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சிலர் கடை உரிமையாளர்கள் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க தடுப்பூசி போட்டால் இலவசமாக பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் கொடுப்பதாக அறிவித்து வருகின்றனர்.
அந்த அந்தவகையில் மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் கார்த்திகேயன் என்பவர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முடிதிருத்தும் கட்டணத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.