Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவே உனக்காக’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீனிஷ் அரவிந்த் இணைந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

 

 

Srinish Aravind (Actor) Height, Weight, Age, Girlfriend, Biography & More »  StarsUnfolded

இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீனிஷ் அரவிந்த் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ‌. தற்போது ஸ்ரீனிஷ் அரவிந்த் வருகையால் பூவே உனக்காக சீரியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |