தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் நகைக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியது முதல் நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்காததால் வாழ்வாதாரம் பாதிகப்பட்டுள்ளதால் நகை கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று நகை தொழிலாளர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.