Categories
உலக செய்திகள்

இது திட்டமிடப்பட்ட சதியா..? ஊர்வலத்தின் நடுவே பாய்ந்த வாகனம்… பதறி ஓடிய பொதுமக்கள்..!!

அமெரிக்காவில் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஒருவர் வாகனத்தை கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அமெரிக்காவில் உள்ள லாடர்டேல் கோட்டைக்கு வடக்கே சுமார் 10 மைல் தொலைவில் உள்ள வில்டன் மேனர்ஸில் எனும் பகுதியில் மாலை 7 மணி அளவில் பகீர் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த வாகனம் ஒன்று ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்தவர் தவறுதலாக ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் நகர காவல்துறையினரும் இந்த சம்பவம் ஒரு விபத்து என்றே தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பலரும் இது திட்டமிட்டு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |