Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகை எல்லாம் அப்டியே தான் இருக்கு… அடுத்தடுத்த நகை கடைகளில்… திருட முயற்சி…!!

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ள 2 நகைக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வரதராஜபுரம் தெருவில் ரங்கநாதன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள காளவாசல் தெருவில் அசோக்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்களிருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகை கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை நகை கடைகளை பார்வையிடுவதற்காக ரெங்கநாதன் மற்றும் அசோக் சென்றுள்ளனர்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக கம்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் இதர காவல் அதிகாரிகள் இருகடைகளையும் திறந்து ஏதேனும் திருடுபோய் உள்ளதா என விசாரித்துள்ளனர். ஆனால் கடைகளில் இருந்த நகைகள் லாக்கரில் பாதுகாப்பாக இருந்துள்ளது. மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |