Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தில்… சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்… தொற்று பரவும் அபாயம்…!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவித்த ஊரடங்கினாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருவதினாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி பணிகளை அதிகப்படுத்துவற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. தேனி மாவட்டம் முழுவதிலும் 15 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள படையெடுத்து வந்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்றுள்ளனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |