தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று முதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப இந்த நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 விமானி வரையிலும் 5 நிமிட இடைவெளிகளிடனும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியுடனும் செயல்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.