தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற 11 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்படவில்லை. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புதிய தளர்வுகள் கிடையாது. தேநீர், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது என்ற நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.