Categories
மாநில செய்திகள்

இவை மட்டும் 100%…. மற்றவை 50% பணியாளர்களுடன்…. செயல்பட அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களோடு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி.

Categories

Tech |