நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னதாக கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வினியோகம் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியீருந்தார்.
மேலும் ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு தேவையான 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கும். கொரோனா தடுப்பூசிக்காக இனி மாநில அரசுகள் செலவழிக்க தேவையில்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்தது. இதற்கு முன்பதிவு தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.