டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற 9 பேர் கொண்ட உகாண்டா அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் தற்போது ஜப்பான் நாட்டிற்கு செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்கா கண்டத்தைச் 9 பேர் கொண்ட உகாண்டா அணி ஜப்பான் சென்றனர்.
அப்போது அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் .அத்துடன் அவர்கள் ஜப்பான் வருவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்ற ‘நெகட்டிவ்’ முடிவே வந்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை தவிர மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.