Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் காலையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…. பரபரப்பு….!!!!

நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை மூன்று பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் சிறுவனை கேவி குப்பத்தை சேர்ந்த பெண்கள் பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் துன்புறுத்தி அடித்துக் கொன்றுள்ளனர். இதனையடுத்து பாக்கியலட்சுமி,திலகவதி மற்றும் கவிதா ஆகிய 3 பெண்களிடம் கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |