பெல்ஜியத்தில் நடந்த பார்முலா 2 கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி இளம் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா – ஸ்டாவோல்டில் பிரபல பார்முலா 2 கார் பந்தயம் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸை சேர்ந்த அந்தோன் ஹூபர்ட் (anthonie hubert) என்ற 22 வயதான இளம் வீரரும் கலந்து கொண்டார். இவர் பல்வேறு கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வென்றுள்ளார்.
இந்நிலையில் போட்டியின் போது எதிர்பாராத விதமாக இவரது கார் வேகமாக உருண்டு பிரண்டு விபத்தில் சிக்கியது. இதனால் ஹுபர்ட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் போது மேலும் அமெரிக்க வீரர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார். அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவம் நடந்ததன் காரணமாக அடுத்து நடக்கவிருந்த கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டன.
கார் ரேஸில் இளம் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மற்ற வீரர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு போட்டியை நடத்தும் அமைப்பும், வீரர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: Formula 2 driver Anthoine Hubert killed in major crash at the Belgian Grand Prix pic.twitter.com/aLWaZaMIMF
— BNO News (@BNONews) August 31, 2019