Categories
மாநில செய்திகள்

அது என்ன மூன்றாம் பாலினம்?…. ஆதவன் தீட்சண்யா கேள்வி…..!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 4 வண்ணங்களின் கட்டணமில்லா பயணச்சீட்டு என அச்சிடப்பட்டு தனியாக வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்ட அனைவரும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணச்சீட்டுகளை பெற்றுக் கொண்டு பயணம் செய்யலாம்.

இதனையடுத்து பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய திருநங்கைகளுக்கு வழங்கப்படும் பயணசீட்டுகளில் “மூன்றாம் பாலினம்” என்று குறிக்கும் வகையில் ‘ மூ.பா ‘ என குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் முதல் பாலினம், இரண்டாம் பாலினம் எது என்ற கேள்வியை எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா முன்வைத்துள்ளார். மேலும் அவர்களை மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடாமல் மாறிய பாலினம் என குறிப்பிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |