Categories
மாநில செய்திகள்

ஜூலை 15ம் தேதி வரை செல்லும்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 4 வண்ணங்களின் கட்டணமில்லா பயணச்சீட்டு என அச்சிடப்பட்டு தனியாக வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்ட அனைவரும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணச்சீட்டுகளை பெற்றுக் கொண்டு பயணம் செய்யலாம்.

இந்நிலையில் ஏற்கனவே வாங்கிய ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்துள்ளார். மேலும் சென்னையில் 1792 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு என மூன்று வகை கலரில் இலவச பஸ் டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |