ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்ததன் விளைவாக, 3 ஆவது நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவிட்டாலும் தங்களுடைய நாட்டிற்குள் வரலாம் என்று ஜெர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த கொரோனா தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் தீவிரமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.
இதனையடுத்து கொரோனா தொற்றின் பரவல் அதிகமிருக்கும் நாடுகளிலிருந்து வருபவர்களை தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பி ஆணையம் பரிந்துரை செய்ததன் விளைவாக ஜெர்மனி நாட்டின் அரசாங்கம் சில முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது 3 ஆம் நாடுகளான நியூசிலாந்து, இஸ்ரேல், அல்பேனியா, ஆஸ்திரேலியா, லெபனான், ஜப்பான், தென் கொரியா, ருவாண்டா, செர்பியா, சிங்கப்பூர் மாசிடோனியா, நியூசிலாந்து, அமெரிக்க சீனர்கள், தாய்லாந்த், தென்கொரியா போன்ற நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவிட்டாலும் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மனி பெடரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.