காரில் வைத்திருந்த பையை திருட முயன்ற மர்ம நபரிடம் போராடிய பெண் ஒருவர் தன்னுடைய விரலை நிரந்தரமாக இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் தலைநகரமான பாரிஸ் நாட்டிற்கு கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் வந்துள்ளார். அதன்பின் பாரிசிலிருந்து புறப்பட நினைத்த அந்தப் பெண் தன்னுடைய காரில் அவருடைய கைப்பையை போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் காருடன் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண் காரில் வைத்திருந்த கைப்பையை எடுத்து செல்வதற்கு முற்பட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் மர்மநபரிடமிருந்து கைப்பையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் மர்ம நபர் கைப்பையை விடாது தொடர்ந்து இழுத்துக்கொண்டு அதனை பெண்ணிடமிருந்து பிடுங்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான். இந்த கைப்பை போராட்டத்தில் அந்தப் பெண்ணின் விரல் நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மர்ம நபர் குறித்த தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.