சட்டவிரோதமாக சாராயத்தை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபந்தல் பகுதியில் நன்னிலம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர்கள் அதே ஊரில் வசிக்கும் பிரியதர்ஷன் மற்றும் கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரியதர்ஷன் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.