நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞரை கொன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியிலுள்ள புதுப்பாளையத்தில் இருக்கும் ஒரு சோளக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் ஒரு பாயல் சுற்றப்பட்டு இருந்துள்ளது. இதனை கடந்த 7ஆம் தேதி காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிம்புசாகர்(26) என்பதும், அவர் நாமக்கலில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளி யார் என்பதை விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சமுலுராம்(20) மற்றும் ராஜ்மோலை(21) ஆகிய இருவர் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் சத்தீஷ்கருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அந்த 2 இளைஞர்களையும் பிடித்து நமக்கல்லுக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர்மண் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கொலையாளிகளை பிடித்த இன்ஸ்பெக்டர் முருகேசன் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராஜ் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.