Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : 3 ஆம்  நாள் முடிவில்…. நியூசிலாந்து அணி 101 ரன்கள் குவிப்பு …!!!

3 ஆம்  நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு  101 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடந்து வருகிறது. ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்         2 வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்ததால்  இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் 2 வது நாள் ஆட்ட முடிவில் 64. 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 146 ரன்கள் எடுத்திருந்தது .          இதையடுத்து 3 ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் விராட் கோலி 44 ரன்களில்  ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்னில் வெளியேறினார். இதில் அஸ்வின் மட்டும் 22 ரன்கள் எடுக்க, மற்ற  பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 92.1 ஓவர்களில் இந்திய அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து சார்பில் ஜெமிஷன் 5 விக்கெட்டுகளை  கைப்பற்றினார். அடுத்ததாக  முதல் இன்னிங்சை  தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக டாம் லாதம், டிவான் கான்வே களமிறங்கினர். இதில் அணியின் ஸ்கோர் 70 ஆக இருக்கும்போது 30 ரன்களை எடுத்திருந்த டாம் லாதம் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் .  தொடர்ந்து விளையாடிய கான்வே அரைசதம் கடந்தார் . இவர் 54 ரன்களை எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில்  அவுட்டானார். இறுதியாக 3 வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் குவித்துள்ளது .

Categories

Tech |