Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் புரோமோ… எகிறும் எதிர்பார்ப்பு.‌‌…!!!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் இன்று மாலை தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு புதிய பர்ஸ்ட் லுக் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர் ‌.

Categories

Tech |