Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது… பெண் ஊழியருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மரம் விழுந்ததில் முன்கள பெண்பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகனும்,  கவிதா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தரணி ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தொற்று நோய் இருகின்றதா என கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதனை அடுத்து கடந்த 5ஆம் தேதி பத்மினி கார்டன்பகுதியில்  கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சாலையோரம் நின்றிருந்த மரம் திடீரென தரணி மீது முறிந்து விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அருகில் இருந்தவர்கள் தரணியை மீட்டு  சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தாரணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நந்தம்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |