Categories
உலக செய்திகள்

எல்லா நாடுகளும் உஷாராகிகோங்க…. ஈரானில் தேர்வுசெய்யப்பட்ட புதிய பிரதமர்…. கருத்து தெரிவித்த இஸ்ரேல்….!!

ஈரானின் புதிய அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது என்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தன்னுடைய முதல் மந்திரி சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 12 ஆண்டு காலமாக இஸ்ரேலை ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவை நப்தாலி பென்னட் என்பவர் தோற்கடித்துள்ளார். மேலும் இவர் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமரின் தலைமையில் முதல்-மந்திரி கூட்டத்திற்கான சபை நடந்துள்ளது.

இந்த முதல்-மந்திரி சபை கூட்டத்தில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் கூறியதாவது, தற்போது ஈரான் நாட்டின் பிரதமராக இப்ராஹிம் ரைசி தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது என்றுள்ளார். மேலும் புதிய அதிபரின் தலைமையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து நாடுகளும் விழித்துக் கொள்வதற்கான உகந்த தருணமிது என்றும் இஸ்ரேலின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |