Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்களால இப்படி ஆகிட்டு… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மணல் கடத்துவதற்கு பயன்படுத்தபட்ட லாரி மற்றும் ஜேசிபி எந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளியன்வலசு கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் சாலையின் ஓரங்களில் இருக்கும் மணல்களை ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரியின் மூலம் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அடுத்து மணல்களை அள்ளும் போது வெள்ளியன்வலசு கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி முன்னிலையில் திடீரென சாலை மறியல் செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் கனிம வளத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட  வாகனங்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |