Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தாயாரின் பரபரப்பு புகார்…!!

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கில்டன்பிரபு – ஆரோக்கியபிரதீபா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆரோக்கிய பிரதீபா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் பிரதீபாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரதீபா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து  தகவல் அறிந்த காவல்துறையினர் பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆரோக்கிய பிரதீபாவின் தாயாரான பிரேமா என்பவர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் இளம் பெண் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |