Categories
விளையாட்டு

யோகா உலகிற்கு இந்தியா அளித்த பரிசுகளில் ஒன்றாகும்…. முன்னாள் வீரர் சேவாக்…!!!

சர்வதேச யோகா தினத்தை  முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றிய அரிய கலையான யோகாவின் சிறப்பை உலக நாடுகள் முழுவதும் பரப்பும் நல்லெண்ணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐநா சபையில் பேசினார். இதைத்தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஜூன் 21ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் உலக நாடுகள் முழுவதும் கொண்டாடப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் 7வது சர்வதேச யோகா தினமான இன்று உலகம் முழுவதும் எளிமையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்  சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ யோகா மற்றும் தியானம் ஆகியவை உலகிற்கு இந்தியா அளித்த பரிசுகளில் ஒன்றாகும் ‘என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு யோகா செய்யும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |