Categories
உலக செய்திகள்

தலையில் பூச்சூடி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்.. காரணம் என்ன..? வெளியான தகவல்..!!

மியான்மரில் மக்கள் சிலர் தங்கள் தலையில் பூச்சூடிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி முக்கிய அரசியல்  தலைவர்களை சிறை வைத்தது. எனவே அந்நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ஆங் சாங் சூச்சியின் 76வது பிறந்த நாள்.

எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் சிலர் தங்களின் தலையில் பூ வைத்துக் கொண்டு பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூறியுள்ளதாவது, ஆங் சான் சூச்சி மற்றும் எங்கள் நாட்டு மக்களுக்கும் விடுதலை வேண்டும்.

தனிநபர் சுதந்திரமும் சமூக சுதந்திரமும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இதனை உணர்த்துவதற்காக தான் இந்த பூச்சூடும் போராட்டம் நடப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஆங் சான் சூச்சி அதிகமான நேரம் தலையில் பூச்சூடியிருப்பார். அதனைக் குறிக்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பூக்களைச் சூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |