கொரோனா குறைந்தவுடன் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களிலும் அனைத்து ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 16 வது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று, கொரோனா காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் தொடங்கி, கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்தார். இந்த கூட்டத்தொடரில் ஆளுநர், பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து கொரோனா குறைந்தவுடன் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களிலும் அனைத்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும் என தனது உரையில் தெரிவித்துள்ளார். நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை துபாய் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தனது உரையில் கூறியுள்ளார்.