Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…. ஜுன் 24-ம் தேதி கிரிவலத்திற்கு தடை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ள கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |