Categories
தேசிய செய்திகள்

ஜூன் 28 முதல் பருவத்தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவிய இரண்டாம் அலை தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஜூன் ஜூலை மாதத்திற்கான பி.எட், எம்.எட் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பி.எட், எம்.எட் மாணவர்களுக்கு தேர்வு ஜூன் 28-ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு கால அட்டவணையை மாணவர்கள் www.tnteu.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளவும்.

Categories

Tech |