Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டிற்கு வந்த பெண்… கூட்டாளிகளுடன் இணைந்து போட்ட திட்டம்… கைது செய்ததில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனியாக இருந்த பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு 3 பவுன் நகையை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள பொதிகை நகரில் அமுதா(48) என்ற பெண் கணவனை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அமுதாவின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அமுதாவின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை மீட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அமுதாவின் வீட்டிற்கு அருணா தேவி(35) என்ற பெண் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த அருணா மற்றும் அவரது கூட்டாளிகள் ரமேஷ்(30), தினேஷ்குமார்(35), சாலமன்(29), மற்றும் எத்திராஜ்(40) ஆகியோருடன் இணைந்து இந்த திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது.

மேலும் தலைமறைவான அந்த 5 பேரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தியதில் நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருணாதேவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 2 இருசக்கர வாகனம் 3 பவுன் நகை ஆகியவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |