சோப்பு நிறுவனத்தில் சட்டவிரோதமாக திருடிச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் இருக்கும் முசிறி பிரிவு ரோடு அருகில் சோப்பு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சோப்பு நிறுவனத்தில் உள்ள தளவாட சாமான்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருட்டிச் சென்றனர். இந்த திருட்டுப சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் துறையூர் காவல்துறையினர் முசிறி பிரிவு ரோடு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் சிங்களாந்தபுரம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் ராஜதுரை மற்றும் மோகன் என்பது காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த 3 பேரும் தான் சோப்பு நிறுவனத்தில் திருடிச் சென்றவர்கள் என்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பின் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 30 கிலோ ஸ்குரு, மோட்டார் சைக்கிள், சாக்கு தைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.