நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் தற்போது நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார் . இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ருத்ரன், சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
Announcing our next with @elviinvinu_off as lead @RajkiranActor & a MASS Hero playing an important role. Other details will be revealed soon…
Happy Birthday #Elviin@AxessFilm @Dili_AFF @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/OJYhJ7aCd1
— Axess film factory (@AxessFilm) June 20, 2021
இந்த படத்தை ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி.டில்லிபாபு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.