டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் ஆய்வு செய்வதற்கு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று 12 மணி அளவில் பஞ்சாபி பாக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இரண்டு ரிக்டர் 2.1 என்ற அளவுகோல் பதிவானது. இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் சமீபகாலமாக டெல்லியில் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த 2020 ஆண்டில் மட்டும் டெல்லியில் பல நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் டெல்லியில் வடகிழக்கு பகுதியில், ரோடாக், சோனிபட், பாக்பட், பரிதாபாத் மற்றும் அல்வார் போன்ற இடங்களில் அதிக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தை கண்டறிவதற்காக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் முடிவு எடுத்துள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.