உலக யோகா தினமான இன்று பிரதமர் மோடி ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான புதிய யோகா செய்தியை வெளியிட்டார்.
5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமன்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு “யோகா உடன் இணைந்து இருங்கள், வீட்டிலேயே இருங்கள்” என்று கருபொருள் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல யோகா ஆசான்களும், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்களும் பங்கேற்றனர். மேலும் இந்த யோகா தினத்தை முன்னிட்டு மோடி ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான புதிய யோகா செயலியை வெளியிட்டார். அதன்படி எம் யோகா (myoga) என்ற இந்த செயலியை உலக சுகாதார மையம் மற்றும் இந்திய மருத்துவத் துறை அமைச்சகமும் இணைந்து உருவாக்கியுள்ளனர். யோகாவின் அகராதியாக செயல்படும் இந்த செயலி ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.