நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் 3 புதிய படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகவுள்ள 2 தமிழ் படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார். விரைவில் இந்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.