Categories
மாநில செய்திகள்

தொழில் நிறுவனங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை…. ஆளுநர் உரை…!!

நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரைத் தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்க உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில், தமிழகத்தின் வெள்ளை அறிக்கை, இட ஒதுக்கீடு, நீட் தேர்வு, நீர் மேலாண்மை, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து, நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரை தீர்வையில் இருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களில் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில் வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் மூன்றுமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |