Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்… நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை… அதிகாரிகளின் முடிவு…!!

விளை நிலங்களில் எண்ணெய்  குழாய் பதிப்பதற்கான இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விவசாய விளை நிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது  இதனைப்பற்றி  அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படுவதாகவும் அதில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்  நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆட்சியர் ரவி கண்ணன், முதுநிலை மேலாளர் முருகேசன், மேலாளர் அஜித், திருவையாறு துணை காவல் சூப்பிரண்ட் சுபாஷ்சந்திரபோஸ்,  தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து விவசாயிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சுப்பிரமணியம், சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், வக்கீல் கோவிந்தராஜ் மற்றும் விவசாயிகள் என பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியர் அதிகாரி பேசியபோது இந்திய அரசின் தொழில்துறை பெட்ரோலியம் வெளியிட்ட புதிய அரசாணை 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தாலும் வழித்தட திட்டத்திற்கான விளைநிலங்கள் எதுவும் கையகப்படுத்த படாததால் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது விளை நிலங்கள் தேவைப்படுவதால் அந்த சட்டத்தின்படி கிராமங்களின் வழியாக செல்லும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  அதிகாரிகள் இதற்கு  ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கோவில் நிலங்களில் பயிர் செய்துள்ள குத்தகைதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து அதிகாரி வருகின்ற 20-7- 2021 தேதிக்குள் இந்தப் பணியினை முழுமையாக முடிக்கவும், குழாய் பதிக்கும் பணி முடிந்தவுடன்  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் விளை நிலங்களை சமன்படுத்தி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டாட்சியர் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார் . இந்தத் திட்டத்தினை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு  சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |