சர்வதேச தரத்தில் நவீன பொது நூலகம் அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில், தமிழகத்தின் வெள்ளை அறிக்கை, இட ஒதுக்கீடு, நீட் தேர்வு, நீர் மேலாண்மை, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும். திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, 3ம் அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கப்படும். கலைஞர் பெயரில் ரூபாய் 70 கோடியில் மதுரையில் சர்வதேச தரத்தில் நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.