காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குணபுயான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மண்டோதரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக மண்டோதரி உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த மண்டோதரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.