Categories
தேசிய செய்திகள்

2 வயசு குழந்தைக்கு இவ்வளவு அறிவா… இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி… குவியும் பாராட்டு…!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தெயன்ஸ்ரீ என்ற சிறுமி தனது ஞாபக சக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த வசந்தம் என்ற நகரை சேர்ந்தவர் பாலாஜி பவித்ரா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிறந்து சில மாதங்கள் ஆன போது அந்த குழந்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்லுமாம். டிவி விளம்பரங்களை பார்த்து அதில் இருப்பது போன்றே நடித்து காண்பித்துள்ளது. குழந்தையின் ஞாபக சக்தியை பார்த்து வியந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நிறைய புத்தகத்தை வாங்கி அதில் இருக்கும் தலைவர்கள், பழங்கள் வகைகள், விலங்குகள் பெயர்கள் போன்ற அனைத்தையும் சொல்லி கொடுத்துள்ளனர்.

இவரின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு அவரது பெற்றோர்களே ஹரியானாவில் தி புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர், 2வயது தெயன்ஸ்ரீக்கு அவர்கள் 11 தலைப்புகளின் கீழ் போட்டியை நடத்தி அதில் தேசிய தலைவர்கள், பறவைகள், விலங்குகள் போன்ற தலைப்புகளில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் குழந்தையின் பெயர் தற்போது இந்திய சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மேலும் விருதுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் அவர்கள் வழங்கியிருக்கின்றனர். குழந்தை புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளது. இவரின் திறமையைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |