உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை முதல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது.
Categories